×

ஏரிகளை தூர்வாரக் கோரி அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: சோழர்கால பாசனத் திட்ட ஏரி, குளங்களை பராமரிக்க கோரிக்கை

அரியலூர் : அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் ஏரிகள் மீட்சி சோழர்கால ஆட்சி என்ற முழக்கத்துடன் சோழர்கால பாசன திட்ட ஏரி, குளங்களை மீண்டும் தூர் வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சார நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். அப்போது பேசிய அவர் அரியலூர் மாவட்டத்தில் கண்டிராதித்தம் ஏரி, கறைவிட்டு ஏறி, சுக்குரனேரி, பொன்னேரி, சுத்தமல்லி நீர்த்தேக்கம் போன்ற நீர்நிலைகளால் பல லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

நாளடைவில் இந்த ஏரிகள் ஆக்கரமைப்பாலும், வரத்து வாய்க்கால்கள் தூர் வரப்படாத காரணத்தாலும் விவசாய பகுதி குறைந்து வருகிறது என்றார். அத்துடன் சோழர் கால ஏரிகள் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் வலியுறுத்தினார். இன்று கீழப்பழூர் பேருந்து நிலையத்தில் தனது நடைப்பயணத்தை தொடங்கியுள்ள அன்புமணி கண்டுராதத்தம், திருமானூர், ஏலாக்குறிச்சி வழியாக தாப்பலூர் சென்று பயணத்தை நிறைவு செய்கிறார். நாளை காலை அரியலூரில் தொடங்கி ஜெயம்கொண்டம் வழியாக காட்டுமன்னார் கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் தனது பிரச்சார நடைப்பயணத்தை நிறைவு செய்கிறார்.


Tags : Annpurani Ramadas Hiking ,Cholhargala Irrigation ,Lake , Lake, Doorwarak, Kori, Anbumani, Ramdas, Trekking
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு...